போதையில் பட்டாசு வெடித்த போது வாலிபரின் கை சிதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ள ஓசூர் சின்ன எலசகிரி பகுதியில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செய்(22) என்பவர் தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை தினத்தில் தனஞ்செய் நண்பர்களுடன் அமர்ந்து மது குடித்துள்ளார்.
இதனை அடுத்து கைகளில் பிடித்தபடி பட்டாசுகளை வெடிக்கச் செய்தபோது ஆட்டோ பாம் வெடித்து வாலிபரின் கை மணிக்கட்டு வரை சிதைந்தது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த நண்பர்கள் வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு இந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.