வாடகை மூலம் குழந்தை பெற்ற விவகாரத்தில் விக்கி – நயன்தாரா விதிகளை மீறவில்லை என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் தாய் தந்தையாக இருப்பதாக அண்மையில் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் வாடகத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொண்ட விவகாரம் பூதாகரமானது. இவர்கள் இருவரும் விதிகளை மீறி குழந்தைகளை பெற்றுக்கொண்டனரா? என பேசுபொருளானது. இந்த நிலையில் வாடகத்தாய் மூலம் நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றுக்கொண்டதில் அவர்கள் விதிகளை மீறவில்லை என்பது தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னதாகவே சுகாதாரத்துறை சார்பில் இது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. மேலும் அந்த தனியார் மருத்துவமனையிடமும் விளக்கம் கேட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.