Categories
தேசிய செய்திகள்

என்னவா இருக்கும்!…. திடீரென கடைகளை பந்தாடிய பெண்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

உத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக. ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநில தலைநகர் லக்னோவில் கோமதிநகர் எனும் பகுதி அமைந்திருக்கிறது. சென்ற திங்கள்கிழமையன்று கோமதிநகர் பகுதியிலுள்ள பத்ரகர்புரத்தில் சாலையோர விளக்கு விற்பனையாளர்களின் கடைகளை ஒரு பெண் கம்பால் அடித்து சேதப்படுத்தி இருக்கிறார். அப்பெண் கம்பால் சாலையோர விளக்கு கடைகளை நாசம் செய்யக்கூடிய வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ஒரு பெண் கையில் தடியை பிடித்தபடி திடீரென வீட்டை விட்டு வெளியே வந்து சாலையோரத்தில் உள்ள விளக்கு கடைகளை தாக்கியதை பார்க்க முடிகிறது. அத்துடன் அப்பெண் கடைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடித்து நாசம்செய்த பின் அங்கு அமர்ந்திருக்கிறார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து லக்னோ காவல்துறையினர் அப்பெண்ணுக்கு எதிராக அடையாளம் காணமுடியாத குற்றத்தை பதிவுசெய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது அப்பெண்ணுக்கு மனநலம் எதுவும் பாதிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Categories

Tech |