மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன.
8ஆவது T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்றி போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் சில போட்டிகள் ரத்தாகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது. இந்நிலையில் இன்று குரூப் 1 பிரிவிலுள்ள நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.
அந்த மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் என பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே மைதானத்தில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை அயர்லாந்து அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் தற்போது 3 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அதே சமயம் ஆப்கானிஸ்தான அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்ததால் ஒரு புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டு ஆளுக்கு 1 புள்ளிகளாக பகிர்ந்து வழங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த போட்டியும் இப்படி மழையால் கைவிடப்பட்டு புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளதால் அணி வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் மிகுந்த கவலையில் உள்ளனர்.
Rain plays spoilsport at the MCG 🌧
Afghanistan and New Zealand share points after the match is called off!#T20WorldCup | #NZvAFG pic.twitter.com/2Z8TmuX1gz
— ICC (@ICC) October 26, 2022