Categories
உலக செய்திகள்

உகாண்டாவில் பார்வையற்றோர் பள்ளியில் பயங்கர தீ விபத்து…11 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தலைநகர் கம்பாலா அருகே முகோனோ எனும் இடத்தில் கண்பார்வை அற்றவர்களுக்காக ஸலாமா என்னும் பெயரில் பள்ளிக்கூடம் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் அங்கு அதிகாலையில் திடீரென தீப்பிடித்துள்ளது மின்னல் வேகத்தில் அந்த தீ பள்ளிக்கூடம் முழுவதும் பரவியுள்ளது. இது பற்றி தகவல் தெரிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை போராடி அனைத்து உள்ளனர் இருந்த போதிலும் இந்த தீ விபத்தில் 11 பேர் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரியவில்லை மேலும் உகாண்டாவில் பள்ளிகளில் தீ விபத்துகள் ஏறுவது ஒன்றும் புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும். சில சமயங்களில் குழந்தைகள் தங்கள் தாங்கும் இடங்களில் மின்தடை ஏற்பட்டு விளக்குகள் அனையும் போது மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கிற போது அந்த விபத்துக்கள் ஏற்பட வழிவகுத்து விடுகிறது.

Categories

Tech |