Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… ஒவ்வொரு மாதமும் கை நிறைய பணம்… சூப்பரான திட்டம்…. உடனே முதலீடு பண்ணுங்க….!!!

தபால் அலுவலகங்களில் மக்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தபால் அலுவலகங்களில் வங்கிகளை விட அதிக வட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் தபால் அலுவலகத்தில் கணக்கை தொடங்கி வருகின்றனர். தபால் நிலையங்களில் செல்வமகன சேமிப்பு திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற பல திட்டங்கள் உள்ளது. அதன்படி மாத வருமானம் சேமிப்பு திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் ஒற்றை மற்றும் கூட்டு கணக்கை இரண்டையும் திறக்கலாம். இதில் குறைந்தபட்ச ரூ.1000 முதலீட்டில் கணக்கு தொடங்கலாம். ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதே நேரத்தில் கூட்டு கணக்கில் முதலீடு வரம்பு ரூ.9 லட்சம் மட்டுமே. மாத வருமானம் திட்டத்திற்கு ஆண்டு 6.6% வட்டி கிடைக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படுகிறது. எந்த ஒரு இந்திய குடிமகனும் தபால் அலுவலகம் வருமான திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து கூட்டுக் கணக்கை தொடங்கலாம்.

இந்த கணக்கிற்க்கு ஈடாக பெறப்படும் வருமானம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சமமாக வழங்கப்படுகிறது. கூட்டுக் கணக்கு எந்த நேரத்திலும் ஒரே கணக்காக மாற்றலாம். ஒற்றை கணக்கை கூட்டுக்கணக்காவும் மாற்றலாம். கணக்கில் ஏதேனும் மாற்றங்களை செய்ய அனைத்து கணக்கு உறுப்பினர்களின் கூட்டு விண்ணப்பம் கொடுக்கப்பட வேண்டும். அதனை தொடர்ந்து MIS கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கு மாற்ற முடியும். இதனையடுத்து கணக்கு திறக்க உங்களிடம் ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அட்டை அல்லது ஓட்டுன உரிமம் போன்றவை இருக்க வேண்டும். இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை வழங்க வேண்டும். முகவரி ஆதாரத்திற்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது பயன்பாட்டு பில் செல்லுபடியாகும். இந்த அனைத்து ஆவணங்களுடனும் நீங்கள் தபால் நிலையத்தில் சென்று அஞ்சல் அலுவலகம் மாதாந்திர வருமானத் திட்டத்தின் படிவத்தை நிரப்பி கணக்கல தொடங்கலாம். மேலும் படிவத்தை நிரப்பும்போது அதில் உங்கள் நாமினியின் பெயரையும் கொடுக்க வேண்டும்.

Categories

Tech |