அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அந்த நகரையே புரட்டி போட்டுள்ளது.
அமெரிக்காவில் மசூரி மாகாணத்தில் செயின் லூயிஸ் நகரில் மத்திய காட்சி மற்றும் நிகழ்கலை உயர்நிலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவரை சரமாறியாக சுட தொடங்கியுள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அலறி அடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் இதற்கு இடையே தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர் போலீசாரை பார்த்ததும் அவர்களை நோக்கியும் அந்த நபர் சுட தொடங்கியுள்ளார் போலீசாரும் திருப்பி சுட்டனர்.
இதற்கிடையே அந்த நபரின் துப்பாக்கி பழுதானதால் தொடர்ந்து அவரால் சுட முடியாமல் போனது இந்த சம்பவம் நடந்தபோது சுமார் 400 மாணவ மாணவிகள் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய நபர் போலீசாரிடம் நடத்திய துப்பாக்கி சண்டையில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலை தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியது 19 வயதான முன்னாள் மாணவர் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. மேலும் அந்த பள்ளியின் கதவுகள் எல்லாம் மூடப்பட்டிருந்த நிலையில் அவர் எவ்வாறு உள்ளே நுழைந்தார் என்பதும் தெரியவில்லை.
இந்த தாக்குதல் பற்றி அந்த நகர போலீஸ் கமிஷனர் மைக்கேல் ஜாக் பேசிய போது துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல் அறிந்து நாங்கள் அந்த பள்ளிக்கு விரைந்தும் அப்போது அங்கிருந்து மாணவ மாணவிகள் ஓட்டம் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர் வைத்திருந்த நீளமான துப்பாக்கி நிலைமை மேலும் விபரீதம் ஆகும் முன் தடுக்கப்பட்டு விட்டது மேலும் எங்கள் அனைவருக்கும் இது ஒரு மோசமான நாள் என்று தான் கூற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பள்ளியின் மாணவர் ஒருவர் பேசும்போது தாக்குதல் நடத்திய நபர் பள்ளிக்குள் வந்து எனது தோழியிடம் நீ சாவதற்கு தயாராகி விட்டாயா என்று கேட்டார் அப்போதே நாங்கள் ஓட்டம் எடுக்க தொடங்கி விட்டோம் என கூறியுள்ளார். இதில் பலியானவர்களில் ஒருவர் அந்த பள்ளிக்கூடத்தின் சுகாதார ஆசிரியை ஜூன் குஸ்கா என்பவர் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். இது பற்றி அவரது மகள் பேசும்போது எனது அம்மா பள்ளி குழந்தைகளை அதிகமாக நேசித்தவர் அவர் குழந்தைகளை காக்கிற போது தான் உயிர் விட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் செயின் லூயிஸ் நகரையே புரட்டி போட்டு உள்ளது.