Categories
தேசிய செய்திகள்

குவிந்து கிடந்த குரங்குகளின் சடலம்…. பின்னணி என்ன?…. கொடூர சம்பவம்…..!!!!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள சிலகம் கிராமத்துக்கு அருகே வனப் பகுதியில் 40க்கும் அதிகமான குரங்குகள் இறந்து கிடந்தது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து கிராம மக்கள், உடனே இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவலளித்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினர் குரங்குகளின் உடல்களை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சம்பவ இடத்திலேயே இறந்தகுரங்குகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டது. குட்டிகள் உட்பட மொத்தம் 45 குரங்குகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

அத்துடன் அதன் உடல்கள் கண்டறியப்பட்ட சிலகம் கிராமத்தில் குரங்குகள் கிடையாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆகவே வேறு இடத்தில் சிலர் விஷம்வைத்து அந்த குரங்குகளை கொன்று இருக்கலாம் எனவும் பிறகு டிராக்டர் வாயிலாக அதன் உடல்களை வீசிச்சென்றிருக்கலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஸ்ரீகாகுளம் வனத்துறை அதிகாரி முரளி கிருஷ்ணன் தெரிவித்தார். எனவே குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |