Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆம்…! கேரளா போயிருக்காங்க… எல்லா கோணத்திலும் விசாரணை…. கோவை ஆணையர் பேட்டி ..!!

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்  செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த கூட்டு சதியில் வேறு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் ?  எங்கெங்கெல்லாம் அவர்களுக்கு தொடர்பு இருக்கின்றது ? என்பதை தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றோம். விசாரணையின் அடிப்படையில் கண்டிப்பாக பத்திரிகைகளுக்கும், பொது மக்களுக்கும் தகவல் அ‌ளி‌க்க‌ப்படு‌ம்.  இந்த புலன் விசாரணையின் அடிப்படையில் நாம போயிட்டு இருக்கோம் என தெரிவித்தார்.

கேரள சிறையில் உள்ள இலங்கை தேவாலயம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை ஜமேசா முபின் கார் வெடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சந்தித்தார்களா என்பது போன்ற கேள்விக்கு பதிலளித்த ஆணையர்,  ஏற்கனவே கைது செய்த நபர்களை விசாரணை செய்ததில் ஒரு சில பேர் கேரளா போயிட்டு வந்திருக்கிறது தெரியுது. ஆனால் என்ன காரணத்திற்காக சென்றார்கள் ? எப்பொழுது சென்றார்கள் ? இதை எல்லாம்  தகவல்களாக சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.

மிக விரைவில் இது பற்றிய முழுமையான தகவல் தெரிய வரும். UAPA சட்டப்பிரிவு குண்டு வெடிச்சு இருக்குறதனால…  எல்பிஜி சிலிண்டர் மூலமாக வெடித்திருக்கு. அதில் என்னென்ன பொருட்கள் இருந்தன ? என்பதை தடையவியல் விசாரணைக் உட்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனால் தொடர்ந்து விசாரணை நடைபெறுகின்றது. UAPA சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் எல்லா கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

யூகங்களின் அடிப்படையில் நிறைய தகவல்கள் வந்து சென்று கொண்டிருக்கிறது. அது எல்லாம் கண்டிப்பா தடையியல்,  அறிவியல் ரிப்போர்ட் வந்த பிறகு முழுமையான கிளாரிட்டி வரும். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒரு சில நபர்களை  2019-ல் NIA விசாரிச்சு இருக்காங்க. அந்த நேரத்தில் அவர்கள் சொன்ன தகவல்கள்,  அதன் பின்னல் அவர்களின் நடவடிக்கைகள் எல்லாமே இன்வெஸ்டிகேசன்ல எடுத்து பார்த்துகிட்டு இருக்கின்றோம் என தெரிவித்தார்.

Categories

Tech |