தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 28 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு (30ஆம் தேதி வரை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. குறிப்பாக சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.