மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் பனங்காலவிளை பகுதியில் நேசமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெரின்(31) என்றால் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெரின் தனது நண்பரான ஜெபிசன்(24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். இந்நிலையில் வில்லுக்குறி பகுதியில் சென்றபோது ஜெபிசன் முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நண்பர்கள் இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெரின் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.