பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாரதிய ஜனதா என்கின்ற ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் அணி தமிழ் மண்ணை குறி வைத்து காலுன்றுவதற்கு துடித்துக் கொண்டிருக்கின்ற வேலையில், அவர்கள் பரப்புகின்ற அவதூறுகளுக்கு, அவதூறுகளை பொருட்படுத்தாமல் இந்த அரசு கலைஞரின் அரசு, கலைஞரின் அரசு என்றால் அண்ணாவின் அரசு, அண்ணாவின் அரசு என்றால், பெரியாரின் அரசு, பெரியாரின் அரசு என்றால் சமூகநீதி அரசு என்பதை இன்றைக்கு உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பவர் தளபதி அவர்கள்.
சமூக நீதி அரசு என்றால் உழைக்கும் எளிய மக்களின் அரசு, சனாதன சக்திகளின் சதியை அறுத்தெறியக்கூடிய, முறியடிக்க கூடிய வல்லமை அண்ணன் தளபதி அவர்களுக்கு இருக்கிறது. இன்றைக்கு பாஜக அரசின் ஆதிக்க போக்கை எதிர்க்கக் கூடிய வகையில், இந்தி திணைப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டில். திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா காலத்திலே எப்படி ? அன்னை தமிழை காப்பதற்கான அறப்போரை தொடங்கினார்களோ அந்த அறப்போராட்ட உணர்வு,
அண்ணா மறைந்து பல பத்தாண்டுகளும் ஆன நிலையிலும், கலைஞர் மறைந்து சில ஆண்டுகள் கடந்த நிலையிலும், திராவிட முன்னேற்றக் கழகம் அதே ஊர்போடு இருக்கிறது, அதே வலிமையோடு இருக்கிறது, அதே வீரியதோடு இருக்கிறது என்பதை இன்றைக்கு வடகர்களுக்கு உணர்த்தக்கூடிய வகையில், டெல்லி ஆட்சியாளர்களுக்கு உணர்த்தக்கூடிய வகையில், தமிழ்நாட்டில் நீங்கள் நினைப்பது போல் வாழாட்ட முடியாது, வாலை சுருட்டி வைத்துக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்க கூடிய வகையில், இன்றைக்கு இந்து திணிப்புக்கு எதிரான அறப்போர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைமையில் நடக்கின்றது என தெரிவித்தார்.