Categories
உலக செய்திகள்

“நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல செயல்களால் ஒன்றிணைப்பேன்”…? ரிஷி சுனக் பேச்சு…!!!!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் ரிஷி சுனக்கை முறைப்படி இங்கிலாந்தின் புதிய பிரதமராக அரசர் மூன்றாம் சார்லஸ் அறிவித்துள்ளார். இதனை அடுத்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் தனது முதல் உரையின் போது நான் தவறுகளை சரி செய்ய நியமிக்கப்பட்டேன் நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல செயலால் ஒன்றிணைப்பேன் என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ரிஷி சுனக் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் ரஷ்யா உடனான போரில் உக்ரேனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி அளித்ததாக இங்கிலாந்து பிரதமரின் செய்த தொடர்பாக கூறியுள்ளார்.

Categories

Tech |