Categories
சினிமா

“காந்தாரா” படம்: 20 நாட்களில் இவ்வளவு கோடியா?…. குஷியில் படக்குழுவினர்…..!!!

ரிஷப் ஷெட்டி தான் எழுதிய கதையில் நடித்து, இயக்கவும் செய்த “காந்தாரா” படம் சென்ற மாதம் 30-ஆம் தேதி கன்னட மொழியில் வெளியாகியது. சென்ற 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் வெளியிடப்பட்டது. கே.ஜி.எப். திரைப்படங்களை தயாரித்திருந்த “ஹாம்பாலே பிலிம்ஸ்” இப்படத்தையும் தயாரித்து இருந்தது. தயாரிப்பு செலவு ரூபாய்.16 கோடி மட்டுமே.

உடுப்பி பக்கமுள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் தெய்வ நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறையையும், நம்பிக்கை துரோகத்தையும், வலியையும் வெளிப்படுத்தும் விதமாக மண் வாசனையோடு கலந்து கொடுத்திருந்த இப்படம், இந்திய திரையுலகில் அனைத்து மொழி ரசிகர்களாலுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

ரூபாய்.16 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம், வெளியாகியா 20 நாட்களிலேயே கன்னடத்தில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல்செய்து சாதனை படைத்து இருக்கிறது. அத்துடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் ரூபாய்.50 கோடிக்கு மேலும், வெளிநாட்டில் ரூபாய்.15 கோடிக்கு மேலும் வசூல் செய்து உள்ளது. கடந்த 20 தினங்களில் உலகளவில் மொத்தமாக இத்திரைப்படம் ரூபாய்.175 கோடி வசூல் சாதனையை நெருங்கி இருக்கிறது. இது மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |