இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 200 வருடங்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன் முறையாக இளம் பிரதமர் என பெருமையுடன் இந்த பதவியை அலங்கரிக்கின்றார். இந்துக்களால் 5 நாட்கள் கொண்டாடப்படும் ஒளியின் திருவிழா எனப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிஷி சுனக் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இது பற்றி தி ராயல் பேமிலி சேனல் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகிய இருவரும் அரண்மனையின் 1844 என்ற எண்ணிடப்பட்ட அறையில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
அந்த அறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட இனிப்புகளை சாப்பிட்டு உள்ளனர் என கூறியுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனகிற்கு பிரதமர் மோடி முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ்டிரஸ் போன்ற உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். இங்கிலாந்தின் 57வது பிரதமர் ஆன ரிஷி யார்க்ஷயர் தொகுதியின் எம்பியாக பதவியேற்ற போது பகவத் கீதையை கொண்டு வந்து பதவியேற்றார் அவ்வாறு செய்த முதல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான் இவர் தன்னை இந்து என கூறிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் அரசர் மூன்றாம் சார்லஸை நேற்று சந்தித்து பேசியுள்ளார் அதன்பின் மூன்றாம் சார்லஸ் முறைப்படி புதிய பிரதமராக ரிஷி சுனக்கை அறிவித்திருக்கின்றார். தீபாவளி அன்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு வரலாற்று தருணம் என இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் புகழ்ந்து வருகின்றனர். மேலும் கடந்த 2020 ம் வருடம் நிதி மந்திரியாக பதவி வகித்தபோது 11 டௌனிங் ஸ்ட்ரீட் பகுதியில் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே தீபாவளி என்று மெழுகுவர்த்திகளை ஏற்ற்றியுள்ளார்.