Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜி.பி.முத்து சரியான முடிவு தான் எடுத்திருக்கிறார்”…. ரசிகர்கள் நெகழ்ச்சி….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக உள்ள ஜி.பி.முத்து சோசனஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.ஸ டிக் டாக் மூலம் பிரபலமான இவர் அதன் தடைக்கு பின்னர் யூடியூப் பக்கம் கரை ஒதுங்கினார். ‌சோசியல் மீடியாவில் இவர் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் மிக பிரபலம். அதற்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஜி.பி.முத்து இரண்டாவது வாரத்தில் வீட்டின் தலைவராகியுள்ளார். இவரின் ஒவ்வொரு செயலும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

கடந்து சில நாட்களாகவே டல்லாக இருந்த ஜி.பி. முத்து தற்போது தன்னால் முடியவில்லை என்றும் குழந்தைகள் ஞாபகமா இருப்பதால் வீட்டிற்கு போகவேண்டும் என்று அவர் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பிக் பாஸ், கமல் உள்ளிட்ட அனைவரும் சமாதானம் சொல்லியும் கேட்காத ஜி.பி.முத்து வீட்டை விட்டு வெளியேறினார். இறுதிவரை பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் சவாலான போட்டியாளர்களாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து இரண்டு வாரத்திலேயே வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்ததை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தற்போது ஜி.பி.முத்து, மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளார். புது டிரஸ், ஸ்வீட், பட்டாசு என ஜி.பி.முத்து வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் கலை கட்டியது. வழக்கம் போல் “நண்பர்களே தீபாவளி வாழ்த்துக்கள்” என ரசிகர்களுக்கும் தனது வாழ்த்துக்களை ஜி.பி.முத்து பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது சரிதான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |