விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் வாரம் சீரியல் நடிகை சாந்தி எவிக்ட் ஆனார். ஆனால் ஜி.பி.முத்து அவராகவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த சீசனில் அசல் கோலார் ரசிகர்களிடம் ஏடாகூடமான பிரச்சினைகளில் சிக்கி வருகிறார். அவரது நடவடிக்கைகள் குறிப்பாக பெண்களிடம் அவர் நடந்து கொள்ளும் வீதம் இணையதளத்தில் கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து பெண் போட்டியாளர்களும் கடலை போட்டு வந்தார்.
இதனையடுத்து ஜி.பி.முத்து, என் தம்பி நீங்க பசங்க கூட எல்லாம் பேச மாட்டீங்களா என்ன பங்கமாக கேட்டு கலாய்த்தார். இந்நிலையில் அசல் கோலார் மற்றும் நிவாஷினி இருவரும் காதலித்து வருவதாகவும் ஒரு கிசு கிசு எழுந்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் இருவரும் சற்று நெருக்கமாகவே பழகி வருகிறார்கள். சிங்கப்பூர் மாடலான நிவாஷினி பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக யாரிடம் பேசாமல் அமைதியாக இருந்த நிலையில், அவரை பாட்டு பாடியை கவர்ந்து விட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அசல் கோலார் இடம் பெற்றுள்ளார்.
Asal Kolaaru 🤣🤣🤣#GpMuthu #BiggBossTamil6#BiggBossTanil #BiggBoss pic.twitter.com/y2iiW59Ndn
— Dr Kutty Siva (@drkuttysiva) October 25, 2022