Categories
உலக செய்திகள்

சிரியா நடத்திய வான்வெளி தாக்குதல்… 33 துருக்கி ராணுவ வீரர்கள் பலி!

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் அரசுக்கு எதிராக குர்திஷ் போராளிகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. அதனால் ரஷ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் போராளி குழுக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே நேரம் குர்திஷ் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்றது. ஆம், சிரிய எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை பல இடங்களில் குவித்து வைத்துள்ளது. அடிக்கடி இரு பிரிவினருக்கு இடையே தாக்குதல் நடைபெற்று வருகின்றது. இதில் அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர்.

Image result for At least 33 Turkish soldiers were killed in an air strike in Syria's Idlib province.

இந்த நிலையில் இட்லிப் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கத்தில் அங்கு இருக்கும் பாரா மற்றும் பிலியன் நகரங்களில் சிரியா மற்றும் ரஷ்ய கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதல்கள் நடத்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |