Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! தமிழகத்தில் ரூ.‌ 6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையா….? வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கும், உறவினர்கள் வீட்டுக்கும் சென்றனர். இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதன் பிறகு தீபாவளி பண்டிகை என்றாலே பொதுவாக புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடிப்பது தான். அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு பூஜை செய்து புத்தாடை அணிந்து, இனிப்புகளை அக்கம் பக்கத்தினருக்கு பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர்.

இதில் குறிப்பாக பட்டாசு வெடிப்பது என்றாலே பலருக்கும் அலாதி மகிழ்ச்சி. இந்நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன்படி நடப்பாண்டில் பட்டாசுகள் 6000 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக தெரிவித்துள்ளனர். இது கடந்த வருடத்தை விட 30 சதவீதம் அதிகமாகும். நடபாண்டில் மூலப்பொருட்களின் விலை உயர்வின் காரணமாக உற்பத்தி சற்று குறைந்தது. ‌ இருப்பினும் பட்டாசுகள் நன்கு விற்பனையாகியுள்ளது. மேலும் மத்திய அரசின் ஆதரவும் உச்ச நீதிமன்றத்தின் தடையும் நீங்கினால் இன்னும் அதிக அளவில் பட்டாசு விற்பனையாகும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |