Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு துண்டான இளைஞரின் உடல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் பகுதியில் சேலம் மற்றும் ஈரோடு செல்லும் ரயில்வே தண்டவாளம் உள்ளது. அங்கு நேற்று அதிகாலை ரயில்வே பாதையின் வழியாக ஈரோட்டில் இருந்து சேலம் சென்ற மைசூர் கொச்சுவல்லி எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுனர் ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார்.அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த ரயில்வே போலீசார் இளநரியின் உடல் இரண்டு துண்டான நிலையில் சடலத்தை மீட்டு தண்டவாளத்தில் இறந்து கிடந்த இளைஞர் குறித்து நடத்திய விசாரணையில் மோரூர் அருகே உள்ள வேங்கி பாளையம் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் மனைவி அவரது தாய் வீட்டில் கடந்த ஐந்து மாதங்களாக இருந்து வந்ததாகவும் அடிக்கடி மனைவி குழந்தையை பார்க்க சசிகுமார் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று தனது மனைவியின் சகோதரி வீட்டிற்கு குடும்பத்துடன் சென்ற சசிகுமார் இரவு தனது வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு புறப்பட்டார்.

இதனிடையே இன்று அதிகாலை ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக சடலமாக மீட்டெடுத்த போலீசார் சசிகுமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.ரயில்வே தண்டவாளத்தில் இளைஞரின் சடலம் இரண்டு துண்டாக போலீசார் மீட்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |