Categories
Tech

Whatsapp பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் புதிய அப்டேட்…. வெளியான தகவல்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றன. அதனால் தங்கள் பயனர்களுக்கு ஏற்றவாறு அவ்வப்போது பல புதிய அப்டேட்டுகளை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி வருகிறது.சமீபகாலமாக பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையிலும் பல அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் நாள்தோறும் வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

இந்நிலையில் மிட்டாய் நிறுவனம் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற வலைத்தளங்களில் இருக்கும் poll என்ற கருத்துக் கணிப்பு ஆப்ஷனை வாட்ஸ் அப்பிலும் கொண்டு வர உள்ளது. இந்த ஆப்ஷனை வெளியிடுவது தொடர்பாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் பீட்டா பயணர்களிடம் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதன் மூலம் வாட்ஸ் அப் குரூப் மற்றும் தனி பயணங்கள் என இரு தரப்பிலும் கருத்துக்கணிப்பு நடத்தலாம் என கூறப்படுகிறது.

Categories

Tech |