Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. ரூ.2000 பணம் இன்னும் வரவில்லையா?…. நவம்பர் 30ஆம் தேதிக்குள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த பணம் 2000 ரூபாய் விதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 12வது தவணை பணம் அண்மையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் இன்னும் பல விவசாயிகளின் கணக்கில் பணம் வந்து சேரவில்லை.ஒருவேளை உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால் காரணம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த திட்டத்தில் பல மோசடிகள் நடைபெறுவதால் அதனை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது இ கேஒய்சி என்ற வசதி அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இது செய்யப்படாத விவசாயிகளுக்கு பணம் வராது. முதலில் உங்களின் கணக்கில் பணம் வந்து விட்டதா என்பதை சரி பார்க்க வேண்டும். ஒருவேளை சில காரணங்களுக்காக உங்களின் வங்கி கணக்கில் பணம் வராமல் போகலாம். அது குறித்த நிலவரத்தை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

அதற்கு முதலில் https://pmkisan.gov.in/என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு நீங்கள் பயனாளியின் நிலையை கிளிக் செய்ய வேண்டும். தற்போது உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு கேப்சா குறியீட்டை நிரப்பி சமர்ப்பித்து அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.மேலும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் அனைவருக்கும் தவணை பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |