முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விராட் கோலிக்கு சிறப்புப் பாராட்டுகளைத் தெரிவித்து ஓய்வு பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.
2022 டி20 உலகக் கோப்பையில் கடந்த 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஆட்டம் உலகளவில் கவனத்தை பெற்றது. இதில் டாஸ் வென்று இந்தியா பந்துவீச, 160 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்.. இதையடுத்து இந்தியா இலக்கை துரத்தி ஆட்டத்தின் கடைசி பந்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை பார்த்த அனைவருக்கும் இதயத்துடிப்பு எகிறியிருக்கும் என்பதே உண்மை.. இலக்கை துரத்தும் போது டாப் ஆர்டர்கள் சொதப்ப 6.1 ஓவரில் 31/4 என தோல்வியின் விளிம்பில் சிக்கித் தவித்தது இந்தியா. அப்போது கோலியும், ஹர்திக் பாண்டியாவும் கைகோர்த்து பொறுமையாக ஆடினர். பதினோராவது ஓவர் வரை பொறுமையாக ஆடிய அவர்கள் 12வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்தனர். கடைசி வரை இருவரும் போட்டியை எடுத்துச்செல்ல இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. முகமது நவாஸ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் அவுட் ஆக அடுத்தப்பந்தை தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக் கொடுக்க 3ஆவது பந்தில் கோலி 2 ரன்கள் ஓடி எடுத்தார்.
தொடர்ந்து கோலி 4ஆவது பந்தில் ஒரு சிக்ஸ் அடிக்க அது நோபால்.. மீண்டும் 4ஆவது பந்தை ஒயிடாக வீசினார் முகமது நவாஸ். இப்போது வெற்றிக்கு 3 பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் பரபரப்பானது. பின் 4ஆவது ப்ரீ கிட் பந்தை கோலி எதிர்கொண்ட போது பால் ஸ்டெம்பில் பட்டு பின்னாடி செல்ல ஓடி 3 ரன்கள் எடுத்தார் கோலி. இப்போது 2 பந்தில் 2 தான் தேவை.. ஸ்ட்ரைக்கிற்கு வந்த தினேஷ் கார்த்திக் ரிஸ்வானால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். பின் அஸ்வின் உள்ளே வர லாஸ்ட் பந்தை நவாஸ் ஒயிடாக வீசினர். பின் அஸ்வின் 1 ரன் அடித்து வெற்றிபெற வைத்தார். இப்போட்டி இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டியிலேயே மறக்க முடியாத போட்டியாக மாறிவிட்டது. இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஆட்டநாயகன் கோலியை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஷோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில் பாகிஸ்தான் அணியை பாராட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தொடக்க ஆட்டக்காரர்களான பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் விரைவாக அவுட் ஆன பிறகு இப்திகார் அகமது மற்றும் ஷான் மசூத் அவர்களின் அரை சதங்கள் இன்னிங்ஸை நிலைநிறுத்தியது. பின்னர் அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் இந்தியாவை ஆரம்பத்தில் மடக்கி 31/4 ஆகக் குறைத்தனர்.
“பாகிஸ்தான் அற்புதமாகச் செயல்பட்டுள்ளது. சோகமாக இருக்காதீர்கள், நீங்கள் அனைவரும் நன்றாக விளையாடினீர்கள். இந்தியா நன்றாகவே விளையாடியது… அவர்கள் வரலாற்றில் மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றை வென்றனர். இது ஒரு முழுமையான உலகக் கோப்பைப் போட்டி.கேட்ச், ரன்-அவுட், நோ-பால், சர்ச்சைகள், ஸ்டம்பிங்” என்று அது அனைத்தையும் இழந்துவிட்டது. “உலகக் கோப்பை இப்போதுதான் தொடங்கிவிட்டது, இந்தியா-பாகிஸ்தான் விளையாடும் போதுதான் உலகக் கோப்பை தொடங்கியுள்ளது, இரு அணிகளும் மீண்டும் மோதும். இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவைக் காணும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அக்தர் 53 பந்துகளில் 82 ரன்களை நாட் அவுட்டுடன் எடுத்ததற்காக நட்சத்திரமான விராட் கோலிக்கு சிறப்புப் பாராட்டுகளைத் தெரிவித்து, இது அவரது வாழ்க்கையின் ‘மிகப்பெரிய’ செயல்திறன் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து அக்தர் கூறியதாவது, அவர் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னிங்ஸை விளையாடினார். அவர் தன்னம்பிக்கை மற்றும் குணநலன்களைக் கொண்டிருந்ததால் அவர் நாக் ஆட முடிந்தது.
நீங்கள் கீழே இருக்கும் போது, தன்னம்பிக்கை புத்துயிர் பெற வேண்டும், மேலும் தன்னம்பிக்கை வலுப்பெறும் போது , நீங்கள் இன்னொருவராக மாறுவீர்கள், அதன் உருவம் தான் விராட் கோலி. அவர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனெனில் அவர் தனது முழு ஆற்றலையும் டி20ஐ கிரிக்கெட்டில் செலுத்த நான் விரும்பவில்லை. இன்று போன்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்கள் அடிக்க முடியும்” என்று கூறினார்.. இவரது கருத்தால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் தங்களது பதிலடியை கொடுத்து வருகின்றனர்.