Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் கார் வெடித்து சிதறிய சம்பவம் : 5 பேருக்கு நவம்பர் 8 வரை நீதிமன்ற காவல்..!!

கோவையில் கார் வெடித்து சிதறி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று அதிகாலை நேரத்தில் கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சிலிண்டர் வெடிகுண்டு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காலை விமானம் மூலமாக கோவை வந்து, அதன்பின் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்று சம்பவ இடத்திற்கு விரைந்து கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதிக்கு வந்தார். அங்கு சென்று வெடித்து சிதறி கிடந்த கார் அங்கிருந்து தடயங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து துப்பு துலக்குவதற்கு 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த ஜமேஷா முபின் சனிக்கிழமை அன்று இரவு வீட்டில் இருந்து வெளியேறிய சிசிடிவி காட்சிகள் வெளியானது. இந்த சிசிடி காட்சிகளை பார்க்கும்போது ஜமேஷா முபின் உட்பட 5 பேர் இருக்கின்றனர். அவருடன் இருப்பவர்கள் யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஜமீசா முபின் வீடு இருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டதில்ஜமேஷா முபின் உடன் சேர்ந்து சில நபர்கள் வீட்டில் இருந்து மர்மமான பொருட்களை எடுத்துச் செல்வது தெரிகிறது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பு தினம் சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில் நடந்திருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முகமது தல்கா (25) முகமது அசாருதீன் (23)  முகமது ரியாஸ் (27),  பிரோஸ் இஸ்மாயில் (27) முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய ஐந்து பேரை கைது செய்திருந்தனர். இந்த ஐந்து பேரில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷாவின் தம்பி நவாப் கானின் மகன் முகமது தல்கா என்பது தெரியவந்தது. இவர் கார் கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். நவாப் கான் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை  கைதியாக சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கோவையில் கார் வெடித்து சிதறி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நவம்பர் 8 வரை நீதிமன்ற காவல் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

Categories

Tech |