இன்றைய காலகட்டத்தில் பல கோடி மக்களால் இணையதளமானது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான விஷயங்கள் மற்றும் வீடியோக்கள் புகைப்படங்கள், போன்றவைகள் பகிரப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் சில சமயம் மனதுக்கு இன்பம் தருவவையாகவும், சில சமயங்களில் வருத்தத்தை தருவதாகவும், சில சமயங்களில் வியப்பை ஏற்படுத்துவதாகவும், சில சமயங்களில் பயத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. இந்நிலையில் 75 வருடங்கள் கழித்து சந்தித்த இரு நண்பர்களின் வீடியோவை தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அதாவது எரின் ஷா என்ற பயனாளர் 2-ம் உலகப் போரின் போது கடல் படையில் பணியாற்றிய இரு நண்பர்கள் போரின் காரணமாக பிரிந்த நிலையில், தற்போது அவர்கள் சேர்ந்த நிகழ்வைதான் பகிர்ந்துள்ளார். இதில் ஒருவர் அந்த பயனாளரின் சொந்த தாத்தா ஆவார். மேலும் இணையதளத்தின் மூலமாக 75 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய தாத்தாவை பிரிந்த நண்பரை அவர் தேடிப் பிடித்து சந்திக்க வைத்துள்ளார். அதன் பிறகு இரு நண்பர்களும் சந்திக்கும்போது எடுத்த நெகிழ்ச்சி வீடியோவை தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவானது தற்போது ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகிறது.