தமிழ் சினிமாவில் மூன்றாம் ஆண்டு விலங்கியல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூர்ணா. இவருடைய உண்மையான பெயர் ஷாம்னா கசீம். நடிகை பூர்ணா தமிழில் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது பிசாசு 2 மற்றும் அரை டஜன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக துபாய் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆஷிப் அலி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நடிகை பூர்ணாவுக்கும் தொழிலதிபர் ஷானித் ஆஷிப் அலிக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படத்தை நடிகை பூர்ணா இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரகசியமாக திருமணம் செய்து விட்டீர்களே என்று கூறி வருவதோடு நடிகை பூர்ணாவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.