தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக வளம் வருபவர் விஜய். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை பார்ப்பதற்கு பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்படி இருக்கும்போது தற்போது வாரிசு படப்பிடிப்பில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதாவது வாரிசு படப்பிடிப்பில் பெரிய நட்சத்திரங்களுக்கு ஒரு சாப்பாடு, லைட் மேன் போன்ற தொழிலாளர்களுக்கு வேறு மாதிரியான சாப்பாடு என கொடுக்கின்றார்களாம். அதிலும் அந்த சாப்பாடு நல்லாவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த விஷயம் எல்லாம் விஜய் காதுக்கு சென்றதா என்பதுதான் எல்லோரும் கேட்கும் கேள்வி.