கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னக்குழிவிளை பகுதியில் ஹைஜின் ஜோஸ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜா(38) என்ற மனைவியும், குழந்தைகளும் இருக்கின்றனர். இரவு நேரத்தில் படுக்கை அறையில் சுஜா தூங்கிக் கொண்டிருந்தபோது மாடி கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.
இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் சுஜாவின் வாயை பொத்தி சத்தம் போடக்கூடாது என கத்தியை காட்டிமிரட்டி 11 பவுன் தாலி சங்கிலி பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சுஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.