வாட்ஸ்அப் செயலியானது சரியாக 12 20க்கு அதனுடைய செயல்பாடு முற்றிலும் முடங்கியது. யாருக்குமே மெசேஜ் அனுப்ப முடியல, மெசேஜ் கிடைக்கவில்லை. தொடர்ந்து இந்த பிரச்சனை இந்தியா முழுவதும் நீடித்திருந்தது. தற்போது வாட்ஸ் அப் செயலி 2 மணி நேரம் கழித்து செயல்படத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் பயன்படுத்தப்படக் கூடிய பயனாளர்கள் நாடு முழுவதும் அதிக அளவில் இருந்து, வாட்ஸ்அப் செயலி மூலமாக தான் தங்களுடைய மெசேஜ்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த இரண்டு மணி நேரம் வாட்ஸ் அப் செயலியை செயல்படாத காரணத்தினால் இதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் பெரும் அவதி அடைந்தனர். அவர்களுடைய செய்தி பகிர்வு 2 மணி நேர பயன்பாடு தவிர்க்கப் பட்டு இருந்தது. குறிப்பாக வாட்ஸ் அப் செயலி சேவை முடங்கி போய் இருந்ததற்கு காரணம் தற்போது வரை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிடவில்லை என்ற தகவலும் கிடைக்கிறது. ஆனால் மெட்டா நிறுவனம் இதை சரி செய்துகொண்டிருக்கிறோம். விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில், தற்போது வாட்ஸ் அப் செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.