சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்காத வகையில் ஏற்பட்ட தீ விபத்தில் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு தளம் தீயில் முழுவதுமாக கருகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 2 தீயணைப்பு வாகனங்கள் , ஒரு மெட்ரோ லாரி உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஏற்கனவே இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து கீழே விழுந்து 3 பேர் இந்த நிலையில் மீண்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.