Categories
தேசிய செய்திகள்

வாகனங்களில் போதை பொருள் கடத்தல்…. உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

பெங்களூருவில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியை சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான லாரியின் டிரைவர் போதை பொருட்களை கடத்தியதால் போலீசார் கைது செய்யப்பட்டு இருந்தார். இருகைக்கு பின்னால் வைத்து போதை பொருளை டிரைவர் கடத்திச் சென்றிருந்தார். இது குறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர்களான காஷ்மீரை சேர்ந்த விஜய் கொஜ்ஜார்(72), சுனில் கவுசிக் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தங்கள் மீது பதிவான வழக்கு ரத்து செய்ய கோரி டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் கர்நாடகா கோட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், உரிமையாளருக்கு தெரியாமலே டிரைவர் தான் போதைப் பொருட்களை கடத்திச் சென்றிருந்தார். அப்படி இருக்கையில் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தேவையற்றது. இந்த போதை பொருட்கள் கடத்தலுக்கு உரிமையாளர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லாததால் அவர்கள் மீது பதிவான வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விஜய் கொஜ்ஜரா, சுனில் குமார் கவுசிக் மீது பதிவான வழக்கை‌‌ ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து நீதிபதி கூறியது, டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்திலேயோ அல்லது பிற வாகனங்களிலோ உரிமையாளர்களுக்கு தெரியாமல் டிரைவர்கள் போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடப்பட்டால் அதற்காக வாகன உரிமையாளர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |