Categories
தேசிய செய்திகள்

பெண் அதிகாரி கொடுத்த புகார்…. மத்திய ஆயுதப்படை கமாண்டர் கைது…. வெளியான தகவல்….!!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதாம்பூரா மாவட்டத்தில் மத்திய ஆயுத போலீஸ் படையில் கமாண்டராக சுரிந்தர் சிங் ரானா என்பவர் பணியாற்றி வருகிறார். அதே பிரிவில் உதவி கமாண்டராக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணியின் போது அந்த பெண்ணுக்கு சுரிந்தர் சிங் ரானா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து அந்த பெண் உதாம்பூரா போலீசில் கமாண்டர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கமாண்டர் சார்பில் கோட்டில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட் உத்தரவின் பேரில் கமாண்டர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Categories

Tech |