மதுரையில் நடைபெற இருந்த பாஜக பேரணி நடைபெற இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல பல பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்திற்கு எதிராகவும் , CAA சட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக சார்பில் இன்று மாலை CAAக்கு ஆதரவாக மதுரையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இதனால் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்ட நிலையில் வெடிகுண்டு மிரட்டல் தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று மாலை பாஜக சார்பில் பேரணி நடக்க உள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் மதுரையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.