தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு காக்கா முட்டை திரைப்படம் நல்ல ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை அதிக அளவில் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தற்போது பர்ஹான், சொப்பன சுந்தரி, தி கிரேட் இந்தியன் கிச்சன், தீயவர் குலை நடுங்க, மோகன்தாஸ் மற்றும் டிரைவர் ஜமுனா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இதில் டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தை கின்ஸ்லின் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டாக்ஸி ஓட்டுநராக நடித்துள்ளார். மேலும் த்ரில்லர் கதையப்சத்தில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் நவம்பர் 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை படக்குழுவினர் ஒரு போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர்.