Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் விபத்தில் இருக்கும் மர்மம்?…. காவல்துறை நடவடிக்கை எடுக்கணும்…. பா.ஜ.க தலைவர் கோரிக்கை….!!!!

கோவை காா் சிலிண்டர் விபத்தின் மா்மமானது விலகுவதற்கு காவல்துறை போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க மாநிலத்தலைவா் அண்ணாமலை கோரிக்கை விடுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவா் தன் டுவிட்டர் பக்கத்தில் “தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து மிகுந்த அதிா்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது.

இதனிடையில் தமிழக காவல் துறை டிஜிபி மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உடனே சென்று விசாரணையைத் துவங்கியுள்ளதை பா.ஜ.க வரவேற்கிறது. தமிழகத்தை மீண்டுமாக கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூகவிரோதிகளிடம் இருந்து மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் இருக்கிறது. பண்டிகை காலக்கட்டத்தில் கோவைமக்களிடம் ஏற்பட்டிருக்கும் பயத்தைப் போக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

Categories

Tech |