Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

துணியை காய போட்ட தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பள கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாஸ்கர் குளித்துவிட்டு ஈர துணியை இரும்பு கம்பியில் காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாஸ்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாஸ்கர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |