Categories
மாநில செய்திகள்

மக்களே!…. மின் சாதனங்கள் அருகே பட்டாசு வெடிக்காதீங்க…. மின் வாரியம் அறிவுறுத்தல்….!!!!

டிரான்ஸ்பார்மர், மின் விநியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்களுக்கு அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என பொது மக்களை தமிழக மின் வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து மின்வாரியம் விடுத்த செய்திகுறிப்பில் அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை மின்இணைப்பு கேபிள்களிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.

அதன்பின் உலோக கம்பங்களில் மின் அலங்காரம் விளக்குகள் கட்டுவதை தவிர்க்கவேண்டும். வீட்டு மின்சாதனங்களை ஒரே நேரத்தில் இயக்கி, அதிக மின்பளு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாதவற்றை அணைக்க வேண்டும். டிரான்ஸ்பார்மர், மின்வினியோக பெட்டி, மின்கம்பிகள் போன்றவற்றின் அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |