தவறுதலாக சுட்டுக்கொன்ற தோழியின் உடலை எரித்த வாலிபருக்கு ஏழு வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கனடா நாட்டின் சர்ரே நகரில் இந்திய வம்சாவளி வாலிபர் ஹர்ஜோத்சிங் தியோ(25) என்பவர் வசித்து வருகிறார். இவரது தோழி பவ்கிரண் தேசி இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் வருடம் ஹர்ஜோத் சிங்கின் பெற்றோர் வீட்டில் தனியாக இருந்திருக்கின்றனர். அப்போது ஹர்ஜோத் சிங்கின் கை துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பவ்கிரண் தலையில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் அதை மறைக்கும் விதமாக பவ்கிரணின் உடலை எரிக்கும் முயற்சியில் ஹஜ்ஜோத் சிங் ஈடுபட்டுள்ளார். ஆனால் உடல் முழுவதும் எரியாமல் அரைகுறையாக இருந்த பவ்கிரணின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது அதன் பின் ஹர்ஜோத்சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த பிரிட்டிஷ் கொலம்பியா சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஹர்ஜுத் சிங்கிற்கு ஏழு வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கின்றார். ஆனால் இந்த தண்டனை போதுமானது அல்ல என இறந்து போன பெண்ணின் உறவினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.