நாடு முழுதும் தீபாவளி பண்டிகைக்கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுதும் பட்டாசு வெடித்ததில் 17 தீ விபத்துகள் நடந்ததாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாகவும், இவ்விபத்துக்கள் அனைத்தும் சிறிய அளவிலான விபத்துகள் என்பதால் பெரிய அளவில் பொருட்சேதமோ, தீக்காயங்களோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.