கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபீனின் என்ற நபர் உயிரிழந்தார். இந்த சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என உளவுத்துறை தகவல் சந்தேகமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபீனின் செல்போன் டிஸ்பிளேவில் “நான் இறந்ததாக செய்தி கிடைத்தால் என்னை மன்னியுங்கள்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ஜமேஷா மூபின் வீட்டில் சனிக்கிழமை இரவு 11:25 மணிக்கு அவர் உட்பட 5 பேர் மர்ம பொருளை தூக்கிச்செல்லும் சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது.