Categories
தேசிய செய்திகள்

“உதவி தேவைப்படுவோருக்கு அறிவு மற்றும் சக்தியின் விளக்கை ஏற்றுவோம்”…. ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து….!!!!

இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் என்னுடைய அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஒளி மற்றும் மகிழ்ச்சிக்கான திருவிழாவில் அறிவு மற்றும் சக்தியின் விளக்கை ஏற்றி ஆதரவில்லாதவர்களுக்கு உதவிகளை செய்வோம். அவர்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டு வர நாம் முயற்சி செய்வோம். இத நன்னாளில் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மற்றும் இன்பம் பெறுக வேண்டிக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |