Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே! உணவு நல்லால்லன்னு சொன்னதுக்கு இப்படியா….? உரிமையாளரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு…..!!!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜஜ்பூர் மாவட்டத்தில் பாலிச்சந்திரப்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசாந்த் பரோடா என்பவர் வசித்து வருகிறார். இவர் உள்ளூர் சந்தையில் ஒரு உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது தனக்கு வழங்கப்பட்ட உணவு ருசி இல்லை என்று உரிமையாளர் பிரவாஹர் சாஹூவிடம் பரீடா முறையிட்டுள்ளார். இதனையடுத்து பரீடா சாப்பிட்ட பிறகு சாப்பாட்டின் விலை மிகவும் அதிகமாக இருந்ததாக கூறியுள்ளார். இதனால் பிரவாகர் மற்றும் பரீடாவுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தின் போது மிகுந்த கோபம் அடைந்த பிரவாகர் கொதிக்கும் எண்ணெயை எடுத்து பரீடாவின் மீது ஊற்றியுள்ளார். இதில் பரீடாவின் உடம்பு முழுவதும் தீக்காயங்கள் பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பரீடாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு‌ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌. மேலும் உணவகத்திற்கு சாப்பிட சென்ற வாடிக்கையாளர் மீது உரிமையாளர் கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |