Categories
தேசிய செய்திகள்

“மங்களகரமான நாளில் மகிழ்ச்சி பொங்கட்டும்” நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர்..‌‌…!!!!

இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகைரானது கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய twitter பக்கத்தில் தீபாவளி நல்வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார். ‌

அதில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி வெளிச்சம் என்பது பிரகாசத்துடன் தொடர்புடையது. இந்த மங்களகரமான நாளில் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நல்வாழ்வும் அதிகரிக்கும். மேலும் அனைவரும் உங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |