செங்கல்பட்டு மாவட்டம் பெரிய காட்டுபாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (36). இவருக்கு ஈஸ்வரி (27) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். இதில் சங்கர் மதுகுடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் அடிக்கடி ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று வீட்டுக்கு சென்ற சங்கர் தனது மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபடுள்ளார்.
இதையடுத்து தகராறு அதிகமானதால் ஆத்திரமடைந்த சங்கர், ஈஸ்வரியின் தலையை பிடித்து சுவரில் முட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஈஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சங்கரை தேடி வருகின்றனர்.