Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்!…. டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்…..!!!!!

காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காருக்குரிய எரிப்பொருள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு கோவையில் நேற்று நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் பேருந்து, ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |