Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்”… விசாரணை அறிக்கையில் தெரிந்த உண்மை… நடவடிக்கை‌…!!!!!

ஸ்டெர்லைட்-க்கு எதிராக பொதுமக்களை தவறாக வழி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினரான தனலட்சுமி, வக்கீல்கள் முருகன், ஜெயம் பெருமாள் மற்றும் நான்சி, தியாகராஜன், துணைச்செயலாளர் கல்லை ஜிந்தா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார்கள். அப்போது அவர்கள் கூறியுள்ளதாவது, சென்ற சில நாட்களுக்கு முன்பு இதுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் மூன்றாயிரம் பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

இதில் ஸ்டெர்லைட்டுக்கும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என குறிப்பிட்டு இருந்தது. பல வதந்திகளால் தான் நான்கு வருடங்களாக மூடப்பட்டு இருக்கின்றது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய் என விசாரணை அறிக்கை தெரிவித்து இருக்கின்றது. ஆகையால் தூத்துக்குடி மக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தூத்துக்குடி நகரம் தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சி பெற வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனவும் அடையாளம் காண முடியாத போராட்டத்தில் ஈடுபட வைத்த 50 நபர்கள் யார் என்பதை தமிழக அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்கள்.

Categories

Tech |