Categories
அரசியல்

தீபாவளி பண்டிகையில் விளக்கு ஏற்றுதல்…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா…? இதோ பாத்து தெரிஞ்சிக்கோங்க….!!!!

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையானது வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையானது வட இந்தியாவில் 5 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படும். பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் பூசி சுடு தண்ணீரில் குளிப்பர். அதன்பிறகு வீட்டில் விளக்கு ஏற்றி வாழை இலைகளை வைத்து வீட்டில் செய்து வைத்த பண்டங்கள் மற்றும் புது துணிகளை வைத்து பூஜை செய்து விட்டு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவர்.

இதைத் தொடர்ந்து புத்தாடைகளை அணிந்து விட்டு இனிப்புகளை அக்கம் பக்கத்தினருக்கு பகிர்ந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்வர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு தீப ஒளி திருநாள் எனும் மற்றொரு பெயரும் இருப்பதால் தீபாவளி பண்டிகையின் போது வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த நன்னாளில் வீட்டின் ஒரு பகுதியை கூட இருளடைய செய்யாமல் அனைத்து பகுதிகளிலும் வெளிச்சம் பரவுமாறு செய்ய வேண்டும். இதனையடுத்து விளக்குகளை எப்படி ஏற்ற வேண்டும் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அதாவது நாம் வீட்டில் விளக்கு ஏற்றுவதன் மூலம் வீட்டில் உள்ள அனைவரின் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாகும் என்பது ஐதீகம்.  முதலில் வீட்டில் உள்ள பூஜை அறையில்தான் விளக்கை ஏற்ற வேண்டும். அதன் பிறகு வீட்டில் துளசி மாடம் இருந்தால் அதில் ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அதன் பிறகு விளக்கை நாம் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையை நோக்கி ஏற்ற வேண்டும். பொதுவாக கிழக்கு திசையில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதுதான் ஐதீகம். மண் சட்டியால் செய்யப்பட்டிருக்கும் அகல் விளக்குகள் அல்லது பித்தளை விளக்குகளை ஏற்றி வைக்கலாம்.

விளக்குகளில் பசு நெய் ஊற்றி வைத்து தீபம் ஏற்றினால் வீட்டில் நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். ஆனால் பசு நெய் வாங்க முடியாதவர்கள் நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கூட ஊற்றி தீபம் ஏற்றலாம். இதைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையின் போது வீட்டில் ஏற்றப்பட்ட விளக்குகளில் உள்ள அனைத்து திரிகளையும் ஒரு கிண்ணத்தில் போட்டு பத்திரப்படுத்த வேண்டும். அதன் பிறகு ஓரிரு நாட்கள் கழித்து வீட்டில் உள்ள விளக்குகளில் இருந்து எடுக்கப்பட்ட திரிகளை வீட்டில் உள்ள நபர்கள் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து சுற்றி வீட்டின் முன்பாக எரித்தால் வீட்டில் உள்ள திருஷ்டி மற்றும் பீடை நீங்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. மேலும் தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் வீட்டில் விளக்கு ஏற்றி நன்மைகளை பெறுவோம்.

Categories

Tech |