பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரை வரவழைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.பி. முத்து பிள்ளைகளை விட்டுவிட்டு இருக்க முடியவில்லை என கூறி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இந்நிலையில், இவருக்கு பதிலாக பிரபல நடிகரை பிக்பாஸ் வீட்டிற்கு வரவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பிரபல நடிகரான மன்சூர் அலிகானை பிக்பாஸ் வீட்டிற்கு வரவழைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தால் கன்டென்ட்க்கு குறைவிருக்காது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இவர் பிக்பாஸ் வீட்டிற்கு வர ஒப்புக் கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.