திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயதாரணி(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று ஜெயதாரணியின் தங்கை வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது எனக்கும் பட்டாசு தர வேண்டும் என கூறி ஜெயதாரணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த தாய் நாகப்பிரியா ஜெயதாரணியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து ஜெய்தாரணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.