Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரி என கூறி பல லட்ச ரூபாய் மோசடி…. நம்பி ஏமார்ந்த 3 பெண்கள்…. போலீஸ் விசாரணை….!!!

பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையம் கருணாநிதி நகரில் முகுந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகுந்தன் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்தபோது விஜயகுமார் என்பவர் அவருக்கு அறிமுகமானார். அந்த நபர் தான் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருவதாகவும், யாருக்காவது அரசு வேலை வேண்டுமென்றால் சொல்லுங்கள் வாங்கிக் கொடுக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

இதனை நம்பி முகுந்தன் அவருக்கு தெரிந்த நாகரத்தினம், கலையரசி, ஜனனி ஆகியோருக்கு வேலை வாங்கி கொடுக்குமாறு கூறி 25 லட்ச ரூபாய் பணத்தை விஜயகுமாரிடம் கொடுத்துள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தையும் திரும்ப தராமல் விஜயகுமார் காலம் தாழ்த்தியுள்ளார். இதனை எடுத்து பாதி பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை தராமல் ஜெயக்குமார் ஏமாற்றிவிட்டார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகுந்தன் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் விஜயகுமார் சென்னை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை பார்த்து பணியினை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும், அதிகாரி என கூறி பல பேரிடமிருந்து பணமோசடி செய்ததும் தெரியவந்தது.

Categories

Tech |